Monday, July 13, 2009

பிரபல(!?)பதிவர்களுக்கு வைக்குறேன் "ஆ"ப்பு !!

வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்

என்னடா இவன் யாருடா புதுசா அப்படின்னு பாக்கிறிங்களா
நான் தாங்க ஆப்பன், ஆப்பன் அப்படினா என்னனு கேக்கலாம் அதாவது சமிபகாலமா இந்த பதிவுலகுல ரொம்ப போட்டி, பொறாமை இது எல்லாம் அதிகமாயிருக்கு யாரு பெரிய ஆளு, எந்த குரூப் பெரிய குரூப்னு காரணம் இல்லாமா அடிச்சிக்கிறது ஒருத்தன ஒருத்தன் கடிச்சிகிறது இப்படி போய்கிட்டே இருக்கு இவங்களுக்கு எல்லாம் என்ன நினைப்பு பதிவுலகம்ன நம்ம தான் நம்ம தாண்டி எவனும் இல்லைன்னு அப்படிங்கிறது தானே அதே மாதிரி நினைப்பு உள்ளவங்களுக்கு, பதிவுலககுல பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுஷங்களுக்கு தப்பு செஞ்சா தேடி போய் ஆப்பு அடிகிறது தான் இந்த ஆப்பனோட வேலை..

அவங்க நல்லது செஞ்ச நல்லதா எழுதுனா பாராட்டவும் செய்வான் அதே சமயத்துல தப்பு செஞ்ச ஆணவத்துல அலைஞ்சா ஓடி போய் ஆப்பு அடிக்கிறதும் இந்த ஆப்பனோட வேலைங்க..

அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..

இந்த பதிவுலகுல நான் இந்த நாலு மாசத்துல பார்த்தது ஒன்னு தான்..
தன்னை நிறையா பேரு பிரபலம்னு நினச்சிக்கிரங்க..ஒரு உண்மை தெரியுமா இவங்க ரோடுல இறங்கி நடந்து போன பக்கத்துக்கு வீடு ஆளுக்கு கூட இந்த ஆளு யார்னு தெரியாது..ஆனா பேசுறதும் எழுதுறதும் பெரிய பருப்பு மாதிரி தான்.

அதே போல் தப்பி தவறி கூட புது மற்றும் வளரும் பதிவர்கள் பதிவு பக்கம் போய் கம்மென்ட் போட கூடாது அப்படி போட்டுடா இவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சிடும் பொம்பளை புள்ளைங்க மட்டும் விதிவிலக்கு.அதுங்க பதிவு பக்கம் இதே மாதிரி பெரிய மனுஷங்கள அடிக்கடி பார்க்கலாம். அதுவும் செங்கலுக்கு புடவ கட்டி விட்ட கூட பின்னாடியே போற பெரிய மனுஷன் கூட இருக்காரு இந்த பதிவுலகத்துல.

இன்னொரு பெரிய மனுஷர் ஒருத்தர் அவரை பற்றியோ இல்லை அவருக்கு வேண்டப்பட்டவங்க யாருக்காச்சும் (கண்டிப்பாக பிரபலமாக இருத்தல் வேண்டும்) எதாச்சும் ஒன்னுனா குரல் கொடுப்பாரு..இதே ஒரு சராசரி பதிவருக்கு எதாச்சும் ஒன்னுனா மூச்சு கூட விட மாட்டார்..அந்த பெரிய மனுஷனோட நேர்மை அவ்வளவோ தான்.

இன்னும் சில பதிவருங்க இருக்கங்கயா உதராணத்திற்கு டிச்லஸ், நோய்யண்டி சைனா
புண்ணியவனுங்க பிரபல பதிவருங்களா தேடி பிடிச்சு சொம்பு அடிக்கிறது தான் இவனுங்க வேலையே..ஒரு சின்ன பதிவர் பக்கம் கூட இவனுங்கள பார்க்க முடியாது..
இதே போல் ஆட்களுக்கும் மணி கட்ட வேண்டும்..

இன்னும் இருக்கு அது எல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்..
அடுத்த பதிவு என்னனு கேக்குறிங்களா..
பெரிய பதிவர்களின் பிளஸ் அப்புறம் மைனஸ்..

அப்புறம் வர்ட்டா.

20 comments:

 1. //அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..//

  இதை நான் வரவேற்கிறேன்!

  ReplyDelete
 2. //தன்னை நிறையா பேரு பிரபலம்னு நினச்சிக்கிரங்க..ஒரு உண்மை தெரியுமா இவங்க ரோடுல இறங்கி நடந்து போன பக்கத்துக்கு வீடு ஆளுக்கு கூட இந்த ஆளு யார்னு தெரியாது..ஆனா பேசுறதும் எழுதுறதும் பெரிய பருப்பு மாதிரி தான்.//

  அட.. இவ்ளோ எதுக்குண்ணே.. கம்ப்யூட்டர் ஷட் டப்ன் பண்ணிட்டாலே யாரும் ஞாமகம் வர மாட்டேங்கறாங்க..

  ( உங்களுக்கு பின்னூட்டமெல்லாம் போட்டு ஆதரிச்சி இருக்கேன். எனக்கு ஆப்பு சொருகிடாதிங்கண்ணே.. நானெல்லாம் மெய்யாலுமே காமெடி பீஸ் தான். :(

  ReplyDelete
 3. //அட.. இவ்ளோ எதுக்குண்ணே.. கம்ப்யூட்டர் ஷட் டப்ன் பண்ணிட்டாலே யாரும் ஞாமகம் வர மாட்டேங்கறாங்க..

  //

  100% true.

  ReplyDelete
 4. நமிதா கம்கூட்டுல ஏன் பெரிய பள்ளம் இருக்கு? :(

  ReplyDelete
 5. குசும்பா.

  அங்கே விண்வெளியில் இருந்து விழுந்த எரிகல் தாக்கியுள்ளது. ஏலியன்கள் இருக்கலாம். பார்த்து சூதானமாக இருக்கவும்...

  ReplyDelete
 6. நீங்கள் சொன்னது...
  "அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்".
  பிரமாதம்.. நானும் புதிய பதிவர்தான்.

  ReplyDelete
 7. நீங்கள் சொல்வதை நேரடியாகவே சொல்லலாமே... சொல்றதுன்னு ஆகிப்போச்சு... பின்னென்ன? இணையத்தில் 'பிரபலம்' என்ற வார்த்தை மிகவும் இலேசானது. ஆனானப்பட்ட ஸேத் காடின் கூட இதனை ஒப்புக்கொண்டார். பிரபுதேவா என்று இந்தியாவில் அறியப்படுபவர் கூட அயர்லாந்தில் பென்னி லாவா என்று தான் அழைக்கப்படுகிறார். உண்மையான செலிப்ரெட்டிகளுக்கே இந்த நிலை! இப்போது யாரும் மோனிகா லெவன்ஸ்கியை வைத்து ஜோக் எழுதுகிறார்களா என்ன? உண்மையிலேயே பதிவர்கள் மத்தியில் அத்தனை அரசியல் நிலவுகையிலும், இப்போது பிரபல அந்தஸ்து கிடைக்கப்பெற்றவர்கள் எல்லோரும் வலையுலகிற்கு புதிதாக வருகையில் உங்களைப்போலவும், என்னைப்போலவும் தானே பாஸ் இருந்திருப்பாங்க! இப்படி நீங்க எதிர்மறையா பேசுவது, நீங்க பிரபலம் ஆவதற்கான வழிமுறை என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

  ReplyDelete
 8. //அதே போல் தப்பி தவறி கூட புது மற்றும் வளரும் பதிவர்கள் பதிவு பக்கம் போய் கம்மென்ட் போட கூடாது அப்படி போட்டுடா இவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சிடும் பொம்பளை புள்ளைங்க மட்டும் விதிவிலக்கு.அதுங்க பதிவு பக்கம் இதே மாதிரி பெரிய மனுஷங்கள அடிக்கடி பார்க்கலாம். அதுவும் செங்கலுக்கு புடவ கட்டி விட்ட கூட பின்னாடியே போற பெரிய மனுஷன் கூட இருக்காரு இந்த பதிவுலகத்துல.
  //

  ஹஹஹஹ...ரொம்ப சரி.

  ReplyDelete
 9. ஆப்பு
  அப்படியெல்லாம் தப்பா நினைக்காத ராசா..
  எங்க இயக்குனர் ஷன்முகபிரியன் அய்யா இருக்கார்..
  நேத்து நீ பிளாக் ஆரம்பிசிருந்தாலும் பிடிச்சிருந்தா தேடிபோய் ஊக்கம் கொடுக்கும் ஒரு தலைகனமில்லா மனிதர்..
  கெட்டவிஷயம் மட்டும் சொல்லாம நல்லவிஷயமும் எழுது என்ன?
  இன்னும் ஒரு சில பேர் இருக்கிறார்கள்.(ஆனால் எனக்கு தெரியாது)
  நான் ஒன்னும் இருப்பை காட்டிக்கொள்ள இதை எழுதவில்லை.
  அப்படி சொல்லும் பருப்புகளை பற்றி எனக்கு கவலையில்லை..

  ReplyDelete
 10. அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..]]

  :)

  [[அதே போல் தப்பி தவறி கூட புது மற்றும் வளரும் பதிவர்கள் பதிவு பக்கம் போய் கம்மென்ட் போட கூடாது அப்படி போட்டுடா இவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சிடும் பொம்பளை புள்ளைங்க மட்டும் விதிவிலக்கு]]

  சரியா சொன்னீங்க

  ReplyDelete
 11. தவறுகளை சுட்டிக் காட்டவும் ஒரு தைரியம் வேணும் அது உங்களிடம் கண்டேன்..

  //அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..//

  இது சந்தோஷமான விஷயம் நண்பா...

  சுட்டிக் காட்டனுமுன்னு முடிவெடுத்திட்டீங்க சரி..அதை வலியுறுத்துங்கள் வலிக்கச் செய்யாதீங்க அப்புறம் அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாது போயிடும்....

  ReplyDelete
 12. ரொம்ப நல்ல விஷயம் ஆரம்பிச்சிருக்கீங்க... நடத்துங்க... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. இதுவரை வந்த அனைத்து நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும்,

  இந்த ஆப்பனின் அன்பு கலந்த ...

  நன்றி!

  நன்றி!!

  நன்றி!!!

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. //தன்னை நிறையா பேரு பிரபலம்னு நினச்சிக்கிரங்க..ஒரு உண்மை தெரியுமா இவங்க ரோடுல இறங்கி நடந்து போன பக்கத்துக்கு வீடு ஆளுக்கு கூட இந்த ஆளு யார்னு தெரியாது..ஆனா பேசுறதும் எழுதுறதும் பெரிய பருப்பு மாதிரி தான்.//

  ரிப்பீட்டேய்!

  கவுண்டர் சொல்ற மாதிரி டேய்! நாராயண ..இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா!

  // பொம்பளை புள்ளைங்க மட்டும் விதிவிலக்கு//

  :-)

  //அட.. இவ்ளோ எதுக்குண்ணே.. கம்ப்யூட்டர் ஷட் டப்ன் பண்ணிட்டாலே யாரும் ஞாமகம் வர மாட்டேங்கறாங்க.

  உங்களுக்கு பின்னூட்டமெல்லாம் போட்டு ஆதரிச்சி இருக்கேன். எனக்கு ஆப்பு சொருகிடாதிங்கண்ணே.. நானெல்லாம் மெய்யாலுமே காமெடி பீஸ் தான். :(

  :-))))))))))))

  ReplyDelete
 16. வாங்க வாங்க... ஆட்டம் இப்பத்தான் சூடு புடிக்கிது... பிரபல பதிவர்களில் சில நல்ல பதிவர்களும் இருக்காங்க... அவுங்கள ஒன்னும் பன்னிராதீங்க...

  ReplyDelete
 17. பதிவுலகப் பிரபலம் என்பது பத்து பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாதது.
  அது குறித்து நான் எழுதிய ஒரு நகைச்சுவைப் பதிவு.
  http://joeanand.blogspot.com/2009/06/blog-post.html

  ReplyDelete
 18. //பதிவுலககுல பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுஷங்களுக்கு தப்பு செஞ்சா தேடி போய் ஆப்பு அடிகிறது தான் இந்த ஆப்பனோட வேலை//

  :)

  ஆனா, ஆப்படிக்கரதுல உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப தூரம் போயிடாதீங்க. ஆப்பு responsibly. அப்பரம், சைபர் கிரைம், போஸ்ட் ஆஃபீஸெல்லாம் போக வேண்டியதாயிடப் போவுது.

  சீரியசான பதிவில், நமீதாவின் அக்கிளில் இருக்கும் பள்ளத்தை ஆராச்சி செஞ்ச குசும்பனுக்கு, குட்டியா ஆப்படிக்கும்படி ஒரு விண்ணப்பம் போட்டுக்கறேன். :)

  ReplyDelete
 19. ///ஆப்பு
  கண்னுக்கு தெரியாதுங்கோ.///
  தலைப்பே சும்மா அதிருதில்லே!!!

  ReplyDelete