Sunday, October 11, 2009

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)

திரும்ப வந்துட்டேன்! இரண்டு மாத ஜெர்மானிய பணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது.. (அதை என்னை வச்சி வேலை வாங்குனவன் சொல்லணும் ).அதிக வேலை காரணமாக இனிமேல் இந்த பயபுள்ளைங்க சங்காத்தமே வேணாம்னு ஒதுங்கி இருந்த என்னை, இந்த பாழாபோன வெட்டி பசங்க சேர்ந்து "உன்னை போல் ஒருவன் " உங்க "ஆயாவ போல ஒருத்தி"ன்னு அநியாயத்துக்கு அழும்பு பண்ணி,ஒரு "காமன் மேன்" ஆ தட்டி கேக்க வர முடியுமான்னு கேட்டு என்ன திரும்பவும் இந்த பாடாவதி பதிவுலகத்துக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க!

எவனாவது கவிதை எழுதுனலே என்னைபோல சில பேரால படிக்கமுடியாது! இந்த எழவுல எதிர் கவுஜன்னு ஒன்னு எழுதுறானுங்க சத்தியராஜிக்கு அன்டர்வேர் தொவைக்குற பயலுங்க! (புரியலைன்னா அமைதிபடை படம் பார்க்கவும்!). அந்த கவுஜ என்ற பேர படிச்சாலே, கஸ்மாலம் கப்பு அடிக்கிது. எவன்டா கண்டுபுடிச்சான் அந்த வார்த்தையை? அவனை குத்தவச்சி காதுமேல காப்பை காச்சி ஊத்தனும்.

இந்த கருமத்தை எழுதுறதுக்குன்னே ஒரு குரூப் இருக்கு. யாரு யாருன்னு ஒருத்தன் ஒருத்தனா பாப்போம்! முதல்ல நம்ம லொக்கு லொக்கு லொக்கு "சொய்யான்டி சைனா". இந்த ஆளு ஏற்கனவே ஒரு மிக பெரிய அதுவும் பயங்கரமா அடிவாங்குன சொம்புன்னு ஊரு புல்லா தெரிஞ்ச கத தான்! இப்போ எவனோ ஒரு பிரபலம் கவிதை அல்லது கதை எழுதுறான்னு வச்சிகிங்க.. அதை கொஞ்சம் கூட வெக்கபடாம, கூச்ச படாம அதைமாத்தி "எதிர் கவுஜ"ங்கிற பேருல நாறடிக்கிறது இவருக்கு ஒரு அல்ப சந்தோசம்!

யோவ்! நான் கேக்குறேன்... "சாந்தி" னு எழுதியிருந்தா அதை மாத்தி "வாந்தி" எழுதுனா அதுக்கு பேரு எதிர்கவுஜயா? பிச்சகாரன் வாந்தி எடுத்தத பார்த்து இன்னொரு பிச்சகாரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு, உன் கப்பு.. ச்சே கவிதை.. ச்சே.,. கவுஜ.. ஒன்னு சொந்தமா எழுது. இல்லனா மூடிகிட்டு எழுதுறவங்க எழுதுறத படி!

அப்புறம் இந்த லிஸ்ட்ல இரண்டாவதா வர்றது நம்ம ஹெர்குலஸ் என்கிற பூரி "பாஜு". ஏன்டா! நாந்தெரியாம தான் கேக்குறேன்... நீ இந்த பிரபலம் எழுதுறத மட்டும் தான் மாத்தி எதிர்கவிதை போடுவியா?. மத்த யாரும் உங்க கண்ணுக்கு தெரியாதா? அதுல பாதிய படிக்கிறதுகுள்ள பேதியாகுதுடா எங்களுக்கு. ஏதோ பார்த்து மனசு வச்சி எங்க வயித்து போக்கை கொஞ்சம் நிறுத்துங்க சாமி!.

அப்புறம் "வால் மனிதன்" ஒருத்தரு! இவரு ஒருத்தருக்கு அல்லகையா இருகாருங்க. அவரு பேரு கூட "சிக்கன் குன்யாவோ" "அனு குன்யா"வோ! அந்த ஆளு எழுதுனத வச்சி இந்த ஆளு எழுதுறதை பார்த்தா.. சிரிக்க முடியாது!(எப்படி சிரிக்க முடியாத? அதெல்லாம் கேக்க கூடாது ) என்ன பொழப்பு இது? கட்டிங்ல எச்சு துப்புன மாதிரி!

அடுத்தது.. இந்த லிஸ்டால பாதிக்கபட்டு அவசர சிகிச்சை பிரிவுல சேர்க்கபடவேண்டிய இடத்தில் இருக்காரு ஒருத்தவரு... அவருதான் "கோன பத்தன்". அவரை கூட சமீபகாலமா இந்த பித்து புடிச்சி ஆட்டுது. என்ன பத்தா உனக்கும் ஆப்பு வேணுமா? சத்தியா முடியலடா! நிறுத்தி தொலைங்கடா!!

உங்களுக்கு, இந்த எதிர்கவுஜைக்கு வர்ற பின்னூட்டம் எல்லாம் பழகுன தோஷத்துக்காக சில பேரு போடுறாங்க. இல்லன்னா அந்தபக்கம் தலைய வச்சி கூட படுக்கமாட்டாங்க. இந்த கருமாத்தரம் புடிச்ச கழுவுற வேலையை இத்தோட நிறுத்திகோங்க! உங்க இம்சையை தாங்க முடியாத உங்க பாலோவரின் மனசாட்சி சார்பா கேட்டுகறேன்!!!

விரைவில் இன்னும் ஷார்ப்பாக...
ஆப்பு